Connect with us

7000 நெருங்கும் ராயபுரம், 6000ஐ நெருங்கும் இரண்டு மண்டலங்கள்: சென்னை கொரோனா நிலவரம்

செய்திகள்

7000 நெருங்கும் ராயபுரம், 6000ஐ நெருங்கும் இரண்டு மண்டலங்கள்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சென்னையில் இருந்து தப்பித்தால் போதும் என்று பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சற்று முன் வெளியிட்ட கொரனோ பாதிப்பு நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதன்படி சென்னை இராயபுரம் மண்டலத்தில் 6837 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இம்மண்டலத்தில் மட்டும் 7000ஐ நெருங்குவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதேபோல் தண்டையார்பேட்டை மற்றும் தேனாம்பேட்டை ஆகிய இரண்டு மண்டலங்களில் 5531 பேர்கள் மற்றும் 5316 பேர்கள் என கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த இரு மண்டலங்களும் 6000ஐ நெருங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் கோடம்பாக்கம் மண்டலத்தில் 4908 பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 4922 பேர்களும், திருவிக மண்டலத்தில் 3896 பேர்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 1957 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 2777 பேர்களும், அம்பத்தூர் மண்டலத்தில் 1741 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையின் 15 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 45,814 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

Continue Reading
To Top