Connect with us

போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 முதல் 10 நாட்களுக்கு விடுப்பு!!

செய்திகள்

போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 முதல் 10 நாட்களுக்கு விடுப்பு!!

சீனாவில் கடந்த ஆண்டு உருவான கொரோனாவின் கோரப்பிடியில் உலகம் சிக்கித் தவிக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் தொடர்ந்து அயராமல் தங்களது வேலைகளைக் கண்ணும் கருத்துமாக செய்து வருகின்றனர்.

அந்தவகையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவரும் போலீசாருக்கு ஓய்வினை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 முதல் 10 நாட்களுக்கு விடுப்பு!!

அதாவது போலீசாருக்கு கொரோனா வைரஸ் பரவுவதால் அவர்கள் உடல்நலத்தினைக் கருத்தில் கோண்டு இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் உள்ள போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 முதல் 10 நாட்கள் வரையில் ஓய்வு, 55 வயதிற்கு மேற்பட்ட காவலர்களுக்கு விடுப்பு என கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஒரு காவல் நிலையத்தில் உள்ளவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த ஓய்வானது அனைவருக்கும் ஒரே நேரத்தில் வழங்க முடியாது என்றும், சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிச்சயம் இது போலீசார் தங்களது உடல் நலனின் மீது அக்கறை செலுத்தவும், மன ரீதியான அழுத்தங்களில் இருந்து வெளிவர உதவும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Continue Reading
To Top