Connect with us

முழு ஊரடங்கின் முதல் நாளே பறிமுதல் செய்யப்பட்ட 650 வாகனங்கள்: பரபரப்பு தகவல்

செய்திகள்

முழு ஊரடங்கின் முதல் நாளே பறிமுதல் செய்யப்பட்ட 650 வாகனங்கள்: பரபரப்பு தகவல்

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் இன்று முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் இந்த ஊரடங்கின் போது இந்த நான்கு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் யாரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியே வரக்கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

மேலும் இரண்டு கிலோமீட்டர் வரை மட்டுமே நடந்து செல்லவும் அனுமதி உண்டு என்றும் அந்த இரண்டு கிலோ மீட்டருக்குள் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அத்தியாவசிய தேவை என்று வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

இந்த நிலையில் வழக்கம் போல் எச்சரிக்கையையும் மீறி இபாஸ் இல்லாமல் பலர் வாகனங்களில் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து செக் போஸ்ட்களில் இருந்த காவல்துறையினர் அனுமதி இன்றி வந்த வாகனங்களை பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சென்னையிலிருந்து உரிய இபாஸ் இல்லாமல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்த 650 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் திடுக்கிட வைத்துள்ளது. முழு ஊரடங்கும் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசார் விவரமாக விளக்கி கூறி இருந்தும் திருவள்ளுவருக்கு மட்டுமே 650 பேர் வாகனங்களில் சென்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காவல்துறையினர் என்னதான் கட்டுப்பாடு விதித்தாலும் பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டால் மட்டுமே கொரோனா வைரஸை ஒழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top