Connect with us

தமிழகத்தில் இன்று உச்சத்திற்கு சென்ற உயிர்ப்பலி: பரபரப்பு தகவல்

செய்திகள்

தமிழகத்தில் இன்று உச்சத்திற்கு சென்ற உயிர்ப்பலி: பரபரப்பு தகவல்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 646 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,728 என உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் இன்று மட்டும் 509 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11634 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 9பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பத்ததில் இருந்து இன்று தான் அதிகபட்ச உயிர்ப்பலி என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 127 பேர் பலியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று 611 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 9,342 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Continue Reading
To Top