Connect with us

டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

செய்திகள்

டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

சீனாவின் செயலிகளாக டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது

மேலும் கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் போன்ற செயலிகளும் தடை செய்யப்பட்டதில் அடக்கம் என்பதால் கோடிக்கணக்கான பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலை அடுத்தே சீன பொருட்களை தடைசெய்ய வேண்டுமென்றும் சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்த மத்திய அரசு சற்றுமுன் இந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 59 செயலிகளின் முழு விபரம் பின்வருமாறு:

Continue Reading
To Top