57 பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கொரோனாவின் பாதிப்பிற்கு சட்டசபை எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பு தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒரு சிலர் அதில் பலியாகியும் வருவது பெரும் அதிர்ச்சிக்கு உரிய செய்தியாக உள்ளது

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொல்லியங்குனம் என்ற பகுதியில் உள்ள காவல் துறை பயிற்சிப் பள்ளியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த 57 பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த 57 பெண் காவலர்களும் பயிற்சி பள்ளியிலேயே தனிமைப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 57 பெண் காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது