5வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள் இழந்து தத்தளித்த இந்திய அணியை ராயுடு, ஷங்கர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் காப்பாற்றினர். அதேபோல் சாஹல், ஹர்திக் பாண்ட்யா, ஷமி ஆகியோர் பந்துவீச்சில் அசத்தினர்.

ஸ்கோர் விபரம்:

இந்தியா 252/10 49.5 ஓவர்கள்

ராயுடு: 90
ஷங்கர்: 45
ஹர்திக் பாண்ட்யா: 45

நியூசிலாந்து: 217/10 44.1 ஓவர்கள்

நீஷம்: 44
வில்லியம்சன்: 39
லாதம்: 37

ஆட்டநாயகன்: அம்பத்தி ராயுடு
தொடர் நாயகன்: ஷமி

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டித்தொடர் வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது.