4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி படுதோல்வி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் இன்று ஹாமில்டன் நகரில் 4வது ஒருநாள் போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்தே 50 ஓவர்கள் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 92/10 30.5 ஓவர்கள்

சாஹல்: 18
குல்தீப் யாதவ்: 15
தவான்: 13

நியூசிலாந்து: 93/2 14.4 ஓவர்கள்

டெய்லர்: 37
நிக்கோல்ஸ்: 30

ஆட்டநாயகன்: பவுல்ட்

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற போதிலும் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை