சினிமாவில் நுழைந்து 37 வருடம் பிரபுவுக்கு மகன் விக்ரம் பிரபு வாழ்த்து

கடந்த 1982ம் ஆண்டு ஏப்ரல் 14ல் வெளிவந்த படம் சங்கிலி. இந்த படத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசு பிரபு அறிமுகமானார். இந்த படம் வந்து 37 வருடங்கள் ஆவதையொட்டியும், பிரபு நடிக்க வந்து 37 வருடங்கள் ஆவதையொட்டியும் அவரது மகன் விக்ரம் பிரபு தனது தந்தை பிரபுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த 37 வருடங்களில் பிரபு சின்னத்தம்பி, அரங்கேற்ற வேளை, நினைவு சின்னம், அயன், தாமிரபரணி , ராஜகுமாரன் என பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து மக்களை கவர்ந்து வருகிறார்.

மிக சிறப்பான நடிகராகவும் சிரித்தால் கன்னத்தில் குழி விழும்அழகான நடிகராகவும் மக்களால் ஆரம்ப காலத்தில் கொண்டாடப்பட்டவர் பிரபு.

ரஜினியுடன், குரு சிஷ்யன், மன்னன், தர்மத்தின் தலைவன் உள்ளிட்ட படங்களிலும் சத்யராஜுடன் சின்னத்தம்பி பெரியதம்பி, கமலுடன் வெற்றி விழா என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் பிரபு.

37ம் வருடம் திரையுலக களம் கண்டிருக்கும் பிரபுவுக்கு வாழ்த்துக்கள்