Connect with us

இன்று ஒரே நாளில் 3509 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

செய்திகள்

இன்று ஒரே நாளில் 3509 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3509 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 9வது நாளாக இன்றும் 2000க்கும் அதிகமாகவும், முதல்முறையாக 3000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 3500க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 1834 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,650 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 45 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 911 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 2236 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் இன்று தமிழகத்தில் 32,543 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 10,08,974 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top