Connect with us

34 குழந்தைகளுக்கு தாயாகிய பிரபல நடிகை

செய்திகள்

34 குழந்தைகளுக்கு தாயாகிய பிரபல நடிகை

மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்திலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்த புகழ் பெற்ற நடிகை ப்ரித்தீஜிந்தா. இவர் பஞ்சாப் கிரிக்கெட் அணியின் உரிமையாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு மட்டுமின்றி சமூக சேவை செய்வதில் தீவிர ஈடுபாடு உடையவர். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருபவர்

இந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ரிஷிகேஷில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் இருந்த 34 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தைகளின் கல்வி, உணவு, உடை உள்பட அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் வழங்கி தற்போது அந்த குழந்தைகள் சமூகத்தில் நல்ல அந்தஸ்தோடு இருப்பதற்கு காரணமாக உள்ளார்.

34 குழந்தைகளையும் தனது சொந்த குழந்தை போல் வளர்த்து ஆளாக்கிய நடிகை ப்ரித்திஜிந்தாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top