10ஆம் வகுப்பு தேர்வை எழுதிய 33 மாணவர்களுக்கு கொரோனா: அதிர்ச்சியில் அரசு

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்தது. ஆனால் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் நீதிமன்றங்கள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதை அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டதோடு, மாணவர்கள் அனைவரும் பாஸ் என்றும் அவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது

இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பியதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் சந்தோஷம் அடைந்தனர்

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. அம்மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டாம் என்றும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டது போல் அனைவரும் பாஸ் என்று அறிவிக்கவேண்டும் குரல் கொடுத்தனர்

ஆனால் கர்நாடக அரசு அதனை கருத்தில் கொள்ளாமல் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தியது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தேர்வு எழுதிய பின்னர் மாணவர்களை பரிசோதனை செய்ததில் அதில் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 33 மாணவர்களுக்கு கொரோனா என்ற தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது