Connect with us

சென்னைக்கு அவசர அவசரமாக வரும் 3000 செவிலியர்கள்: பரபரப்பு தகவல்

செய்திகள்

சென்னைக்கு அவசர அவசரமாக வரும் 3000 செவிலியர்கள்: பரபரப்பு தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவின் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருவதால் சென்னையில் கொரோனாவின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரமாக அதிகரித்து வருகிறது

இந்தநிலையில் சென்னையில் பெரும் கொரோனாவின் தாக்குதலை கட்டுப்படுத்த கூடுதல் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் நியமனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான விளம்பரத்தையும் சமீபத்தில் நாளிதழ்களில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து கொரோனா சிகிச்சை பணிக்காக சென்னையில் பணியாற்ற கூடுதலாக 3000 செவிலியர்கள் வருகை தர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோவில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செவிலியர்கள் சுமார் 3000 பேர்வரை இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சென்னைக்கு வரும் 3000 நர்ஸ்களுக்கும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணி ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர்கள் சென்னையில் பணியை மேற்கொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

Continue Reading
To Top