30 வருட ராஜாதிராஜா வெற்றிக்கதை

ரஜினி நடித்து வெளிவந்த ராஜாதிராஜா திரைப்படம் மாமா உன் பொண்ண கொடு, வா வா மஞ்சள் மலரே, மீனம்மா மீனம்மா உள்ளிட்ட பாடல்களாலும் சிறப்பான மாஸ் ஆன திரைக்கதையாலும் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

72d5cc9ed15d1ee73a76ff6b9cb06fb8

இன்றளவும் இப்படம் மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் இப்படம் உள்ளது.

ரஜினியின் 125வது படமான இந்த படத்தை அந்த நேரத்தில் இளையராஜா தங்களது பாவலர் கிரியேசன்ஸ் சார்பாக தயாரித்தார்.

சாதாரண பழிவாங்கல் கதைதான் அதில் மசாலாக்கள் பல தடவியதால் இப்படம் 100 நாட்களை கடந்து வெற்றி பெற்றது.

கடந்த 1989 மார்ச்சில் வெளிவந்த இந்த திரைப்படம் வந்து 30 வருடங்கள் ஆகி விட்டது. இப்படத்தின் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது பற்றிய நினைலைகளில் மூழ்கி கூறியது.

எனக்கும், பஞ்சு அருணாச்சலம் அண்ணனுக்கும் நல்ல பழக்கம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைச் சந்தித்துப் பேசுவேன். ஒருமுறை பஞ்சு அண்ணனைப் பார்க்கச் சென்றபோது, தீவிர யோசனையில் இருந்தார். `என்ன அண்ணே கடுமையான சிந்தனை?’ என்று கேட்டேன். `இளையராஜா தயாரிக்கும் படத்துல நடிச்சுக் கொடுக்கிறதா ரஜினி சொல்லியிருக்கார். எஸ்.பி.முத்துராமன் டைரக்‌ஷன். கதைதான் அமையலை, யோசிச்சுக்கிட்டிருக்கேன்’ என்றார்.

உடனே நான், “ரஜினிக்கு கதை அமைக்கணும்னா, `எங்கள் வீட்டுப் பிள்ளை’ எம்.ஜி,ஆர் மாதிரி இரட்டை வேடம் போடுற ஆள்மாறாட்டக் கதை யோசிக்கலாம். இல்லைனா, டான் கதையை எழுதலாம்”னு சொன்னேன். அப்போ, `ஏம்பா சுந்தர்ராஜா.. உங்ககிட்ட அதுமாதிரி ஏதாவது கதை இருக்கா?’ என்றார். கொஞ்சமும் தயங்காமல், “உலகமே தெரியாத கிராமத்து அப்பாவியா ஒரு ரஜினி. சொந்தமா சம்பாதிச்சு 50,000 ரூபாய் பணம் கொடுத்தால்தான் உனக்குக் கல்யாணம்னு மாமனார் மிரட்டுகிறார். ஜெயிலில் இருக்கிறார், இன்னொரு ரஜினி. 15 நாளில் சாகப்போகும் தூக்குத் தண்டனைக் கைதி. அவர், அப்பாவி ரஜினியிடம் `நான் உனக்குப் பணம் தர்றேன். அதற்குப் பதிலா எனக்காக ஜெயிலில் நீ இருக்கவேண்டும்’ என்று சொல்ல, ஆள்மாறாட்டம் ஏற்படுகிறது.” இப்படி ஒரு ஒன்லைன் சொல்ல, பஞ்சு அண்ணன் முகம் மலர்ந்தது. `இந்த ஒன்லைன் நல்லாயிருக்கே! இந்தக் கதையை நடிக்கப்போற ரஜினியிடமும், டைரக்‌ஷன் பண்ணப்போற எஸ்.பி.முத்துராமனிடமும் சொல்லட்டுமா… உனக்கு ஆட்சேபனை இல்லையே?!’னு கேட்டார். `தாராளமாகச் சொல்லுங்க!’னு நான் சொன்னேன். 

மறுநாள் நான் சொன்ன ஒன்லைனை ரஜினியிடம் அவர் சொல்ல, அவருக்கும் என் கதை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அன்று இரவு முழுக்க கதையைப் பற்றியே யோசித்து ஒரு முடிவுக்கு வந்த ரஜினி, பஞ்சு அண்ணனுக்கு போன் பண்ணி, `சார் யோசிச்சுப் பார்த்தேன்.. கதையைச் சொன்ன சுந்தர்ராஜனே டைரக்‌ஷனும் பண்ணட்டுமே!’ எனச் சொல்லியிருக்கிறார். பிறகு, பஞ்சு அண்ணன் எனக்குப் போன் பண்ணி விவரத்தைச் சொன்னார். நான், `அண்ணே,  தேவையில்லாம என்னால உங்களுக்கும், முத்துராமன் சாருக்கும் மனஸ்தாபம் வந்துடப்போகுது’னு தயங்கினேன். `அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நீங்க டைரக்‌ஷன் பண்ற வேலைகளைப் பாருங்க. மத்ததை நான் பார்த்துக்கிறேன்’னு பச்சைக்கொடி காட்டினார். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews