30 வது ஆண்டில் அடியெடுத்து வைத்த வெற்றி சித்திரம் கரகாட்டக்காரன்

கடந்த 1989ம் ஆண்டு இதே நாளில் வெளியான படம் கரகாட்டக்காரன். இந்த படம் இவ்வளவு வெற்றி அடையுமா காலம் கடந்த காவியமாக பேசப்படுமா என இப்படத்தை இயக்கிய கங்கை அமரனே யோசித்திருக்க மாட்டார்.

b28a1d91e69952d79992449bb5a5bf49

தில்லானா மோகனாம்பாள் படத்தின் ஒரு சிறு பொறிதான் இப்படம் என்றாலும் இப்படத்தின் மேக்கிங் வேற லெவல்.

ஒரு கரகாட்டக்காரர் அவருடன் பக்க வாத்தியங்களாக கவுண்டமணி, செந்தில் கோவை சரளா என காமெடி கூட்டணிகள், அதைப்போல ஒரு எதிர்தரப்பு கரகாட்ட பெண் நாயகனின் அத்தை மகள் அவர்களுக்குள் ஒரு பகை. இதற்கிடையில் கிராமத்து கோவில் தர்மகர்த்தா சந்தான பாரதியின் வில்லத்தனம் என அருமையான முறையில் ஜனரஞ்சகமாக வந்த படமிது.

கவுண்டமணி, செந்தில் காமெடி இப்படத்தில் உலக பிரசித்தமானது. இன்னும் நூறு வருஷம் ஆனாலும் வாழைப்பழ காமெடி, வெற்றிலை பாக்கு காமெடி. பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம், கார் வச்சுருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சுருக்கா போன்ற காமெடியை சினிமா உலகம் மறக்காது.

முக்கியமாக பாடல்கள் இப்படத்தின் பெரும்பலம் இளையராஜா காதல் பாடல் ஆக இருக்கட்டும், கொண்டாட்ட பாடலாக இருக்கட்டும், எல்லாமே இப்படத்தில் பிரமாதமாக இருந்தது.

மதுரையில் அப்போது ராமராஜனுக்கு சொந்தமாக இருந்த நடனா தியேட்டரில் இப்படம் 486 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இப்படத்தின் சிறப்பு என்பது சரிவிகித உணவு போன்றது காமெடி, காதல், மோதல், ஊடல், பாடல் என அனைத்தும் நச்சென்று அமைந்ததால் இப்படம் காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...