Connect with us

3 ரூபாய் கடனுக்காக 15கிமீ வாடிக்கையாளரை நடக்க வைத்த வங்கி: அதிர்ச்சி தகவல்

செய்திகள்

3 ரூபாய் கடனுக்காக 15கிமீ வாடிக்கையாளரை நடக்க வைத்த வங்கி: அதிர்ச்சி தகவல்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை 3 ரூபாய் 46 காசு கட்ட வேண்டும் என்பதற்காக அவரை 15 கிலோமீட்டர் நடக்க வைத்த வங்கி நிர்வாகிகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமி நாராயணன். இவர் வங்கியில் 35 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அரசு அதில் 32 ஆயிரத்தை தள்ளுபடி செய்துவிட்டது, மீதி மூவாயிரத்தை அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வங்கியில் செலுத்தி விட்டார். எனவே அவர் தனது வங்கிக்கடன் முடிந்துவிட்டது என்று நினைத்திருந்தார்

இந்த நேரத்தில் திடீரென வங்கி அதிகாரிகள் அவரை மொபைல் போனில் அழைத்து உடனடியாக வங்கிக்கு வந்து மீதிப் பணத்தை கட்ட வேண்டும் என்று கூறினார்கள். இதனால் குழப்பமடைந்த அவர் வங்கிக்குச் செல்ல முடிவெடுத்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக பேருந்து உள்பட எந்த வாகனமும் இல்லாத இல்லாததால் அவர் 15 கிலோமீட்டர் நடந்தே வங்கிக்கு சென்றார்

அங்கு சென்றுதான் கட்டவேண்டிய தொகை எவ்வளவு என்று கேட்ட போது வெறும் மூன்று ரூபாய் 46 காசு என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்து இந்த காசுக்காக என்னை 15 கிலோமீட்டர் நடக்க வைத்து விட்டீர்களே என்று அதிர்ச்சி அடைந்தார்

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில் வங்கியில் தணிக்கை நடந்து கொண்டிருப்பதால் அவருடைய கணக்கை முடிக்க வேண்டியிருந்தது என்றும் அதற்காக அவருடைய மூன்று ரூபாய் 46 காசை கட்டுமாறு கூறியதாகவும், அது மட்டுமின்றி அவருடைய கையெழுத்தும் தேவைப்பட்டது என்றும் கூறினர். இது குறித்த செய்தி இணையதளங்களில் வைரலாகி, வங்கி அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன

Continue Reading
To Top