Connect with us

3 நாட்களில் முடியாத கமல், ஒரே மணி நேரத்தில் முடித்த ரஜினி

செய்திகள்

3 நாட்களில் முடியாத கமல், ஒரே மணி நேரத்தில் முடித்த ரஜினி

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியதையடுத்து நேற்று இன்று மற்றும் நாளை என மூன்று நாட்களில் சிறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளார்

இந்த விழாக்கள் தற்போது நடைபெற்று வருகிறது’நேற்று தனது தந்தையின் சிலையை திறந்து அதன் பின் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்னர் இன்று கே பாலசந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். ஆனால் இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

ஆனால் இன்று ரஜினிகாந்த் அவர்கள் இன்று கே பாலசந்தர் அவர்கள் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டது குறித்து இந்த விழாவில் அவர் பேசியது குறித்தும் விழா முடிந்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டிகள் குறித்தும் அனைத்து ஊடகங்களும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு வருகின்றன

குறிப்பாக திருவள்ளுவருக்கும் தனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடப்பதாகவும் காவிச்சாயத்தில் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என்று அவர் கூறியதும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது

கமலஹாசன் மூன்று நாட்களாக மாங்கு மாங்கென்று விழா நடத்தியும் கண்டுகொள்ளாத ஊடகங்கள் ரஜினிகாந்த் ஒரு மணி நேரம் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்ச்சியை முழுவதுமாக நேரடி ஒளிபரப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top