3வது ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தோல்வி


இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்றது, இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வென்றுவிட்ட நிலையில் நேற்று இரு அணிகளுக்கு இடையே 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

இந்திய மகளிர் அணி: 114/10 44 ஓவர்கள்

ஷர்மா: 52
கவுர்: 24
ஹேமலதா: 13

நியூசிலாந்து மகளிர் அணி: 153/2 29.3 ஓவர்கள்

பேட்ஸ்: 57
சாட்டிர்வெயிட்டி:66

ஆட்டநாயகி: அன்னே பீட்டர்சன்

இந்த நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையே முதலாவது டி-20 போட்டி ஆரம்பமாகவுள்ளது.