Connect with us

2வது டி20 – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

விளையாட்டு

2வது டி20 – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஹென்ரிக்ஸ், டி காக் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

பல எதிர்பார்ப்புக்கு இடையில் களமிறங்கி, மிக மோசமான துவக்கம் என்று சொல்லும் வகையில், துவக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்ஸ் 6 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து பவுமா களமிறங்கினார். இந்த இணை அணியின் வெற்றிக்கு வேண்டுவன செய்ய போராடியதுடன், நிலைத்து நின்று ஆடியது. டி காக் அரை சதம் எடுத்தநிலையில் 52 ரன்னில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை அடுத்து பவுமா 49 ரன்னில் அவுட்டாகிப் போனார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

அடுத்து150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேறினார்.

ஷிகர் தவான் 40 ரன்னில் அவுட்டானார். அடுத்து ரிஷப் பந்த் 5 ரன்னில் அவுட்டானார். கேப்டன் விராட் கோலி சிறப்பாக ஆடி, அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். அவர் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

இதன்மூலம், இந்தியா 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி உள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top