2 வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக வெற்றி வாகை சூடுமா இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடரை இந்திய அணி மூன்று ஆட்டங்களிலும் வென்று, 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது இந்திய அணி.

அடுத்து இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரானது மழையின் காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடக்கிறது.

இதுவரை வெற்றியே பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் வெற்றி பெற நிச்சயம் போராடும். 20 ஓவர் ஆட்டத்தில் சொல்லிக் கொள்ளும் அளவு ஆட்டத்தை வெளிப்படுத்தாத ஷிகர் தவான் சிறப்பாக ஆட வேண்ட்டிய நெருக்கடியில் உள்ளார்.

2 வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக வெற்றி வாகை சூடுமா இந்தியா

4-வது பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர் இறங்கிவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் கடந்த 10 வருடங்களாக இந்திய அணி வெற்றி வாகையே சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 20 ஓவர் போட்டியில் தோல்வியை மட்டும் சந்தித்து வரும் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற நிச்சயம் போராடும்.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இதுவரை 128 ஒருநாள் போட்டியில் களம் கண்டுள்ளன. இதில் இந்திய அணி 60 ஆட்டத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி 62 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டம் டையிலும், 4 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போயிள்ளது.