சென்னையில் இன்று காலைக்குள் 26 பேர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று கூட சென்னையில் 1842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கு மேல் சென்னையில் அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கவை

இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாகவும், ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் தலா 5 பேர் மரணம் அடைந்ததாகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நான்கு பேர்களும் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 26 பேர் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தின் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் நிலையில் அதில் பெரும்பாலானோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவின் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளை முதல் சென்னையில் ஊரடங்கு உத்தரவு தளர்வு ஏற்படுத்தவுள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது