Connect with us

25 கோடி சம்பளம் பெறும் கங்கனா

பொழுதுபோக்கு

25 கோடி சம்பளம் பெறும் கங்கனா

பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர். வரலாற்று படமான ஜான்சிராணியிலும் ஹிந்தியில் நடித்து புகழ்பெற்றவர்.

Kangana Ranaut to play Jayalalithaa in biopic

பாரதிய ஜனதா கட்சியின் விசுவாசி இவர்.

இவர் தமிழில் விஜய் இயக்க தலைவி என்ற படத்தில் நடிக்க இருக்கிறாராம். இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட கதையாகும்.ஏற்கனவே நித்யா மேனனை வைத்து பிரியதர்ஷன் படம் இயக்கி வரும் நிலையில் தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடிக்க இருக்கிறார்.

தமிழ் படம் என்றாலும் இவர் பாலிவுட் நடிகை என்பதாலும் இந்திய அளவில் இந்த படம் பேசப்படும் என்பதாலும் இவர் 25 கோடி ரூபாய் சம்பளம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

உறுதிப்படுத்தப்படாத தகவல் இது என்றாலும் அப்படி வாங்கினால் அதுதான் இந்தியாவில் நடிகை வாங்கிய அதிக சம்பளமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top