21 வருடம் கடந்த காதல் மன்னன் – நினைவு கூர்ந்த விவேக்

கடந்த 1998ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி வெளியான படம் காதல் மன்னன். வெங்கடேஸ்வராலயம் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் வந்த இந்த படம் ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்து போனது.

பரத்வாஜ் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார். பொதுவாக இயக்குனர் சரண் படங்களில் காமெடி சற்று வறட்சியாகவே இருக்கும். சரணின் முதல் படமான இந்த படத்தில் காமெடி சற்று தூக்கலாகவே இருந்தது.

படம் முழுக்க அஜீத்துடன் வரும் விவேக் நன்றாக காமெடி செய்திருந்தார்.

அஜீத் ஜோடியாக மானு என்ற கதாநாயகி நடித்திருந்தார். உனை பார்த்த பின்புதான், காதல் மன்னன், உள்ளிட்ட பாடல்கள் படத்தில் புகழ்பெற்றன.

முக்கியமாக இசையமைப்பாளர் எம்.எஸ்.வி இப்படத்தில் நடித்திருந்தார். அவர் விவேக்குடன் சேர்ந்து அருமையாக காமெடி செய்திருந்தார்.

இப்படத்தின் 21ம் ஆண்டு தினத்தை விவேக் குறிப்பிட்டுள்ளார் காலச்சக்கரம் வேகமாக சுழல்கிறது எனவும் கூறியுள்ளார்.