Connect with us

21நாள்-ஆதரவற்றோர் மற்றும் விலங்குகளை கவனியுங்கள்

செய்திகள்

21நாள்-ஆதரவற்றோர் மற்றும் விலங்குகளை கவனியுங்கள்

21 நாள் லாக் டவுன் என்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான் மக்கள் தான் சற்று பொறுத்துக்கொள்ள வேண்டும். எல்லோரும் தனித்திருக்க வேண்டும்.

வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆதரவற்றவர்களுக்கு உதவும் தன்னார்வலர்கள் தெருவோரத்தில் இருப்பவர்களுக்கு உதவுகிறார்கள்.

அதே போல் மனிதனை சார்ந்து இயங்கும் விலங்குகள் பறவைகள் எல்லாம் இருக்கின்றன. சாதாரணமாக ஒரு உணவகத்தின் முன் ஒரு டீயோ பிஸ்கட்டோ வடையோ சாப்பிடும்போது உங்களையே ஒரு தெருநாய் பார்த்துக்கொண்டிருக்கும். அந்த தெருநாய்க்கு நீங்க ஏதாவது வாங்கி கொடுப்பீர்கள் பொதுவாக இப்படி வாங்கி கொடுப்பவர்கள் மிக குறைவு என்றாலும். நீங்கள் போடும் மிச்சம் மீதிகள் உணவகங்கள் திருமண விருந்துகளில் போடும் எச்சில் இலைகள் பஸ்ஸ்டாண்டில் நாம் கொரித்து விட்டு போடும் உணவுகளின் மிச்சம் போன்றவற்றை குப்பைத்தொட்டியில் நாய்கள் தேடி உண்ணும்.இந்த 21 நாட்களில் எல்லா கடைகளும் அடைப்பால் உயிரினங்கள் நிறைய செத்து மடியும் அவல நிலையும் உள்ளது. அதனால் உணவு கொடுக்கும் தன்னார்வலர்கள் தன்னால் முடிந்தவரை நாய்கள் , பறவைகள் என விலங்கு பறவைகளுக்கும் தன்னால் முடிந்தவரை உதவினால் போதுமானதாக இருக்கும்.

ஏனென்றால் சுயநலமாக பல மனிதர்கள் வாழ்ந்துதான் இது போன்ற அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். முக்கியமான இந்த காலத்தில் நாம் மற்ற உயிர்களுக்கு செய்யும் உதவி பின் நாளில் நம்மை உயர்வில்வைக்கும்.

இப்போது நடப்பது காலசுழற்சியினால் கிரக சுழற்சியினால் நடப்பவை. இதெல்லாம் மாறி நல்லவை விரைவில் நடக்கும் அப்போது நீங்கள்செய்யும் நல்லவைகளுக்கு தகுந்த பலன் கிடைக்கும்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top