2019ன் மீம்ஸ் நாயகன் வடிவேல்தான்

வடிவேலு கடந்த சில வருடங்களாகவே அதிகம் படங்களில் நடிப்பதில்லை இருப்பினும் அவர் நடித்த பல படங்களின் வார்த்தைகள், காட்சியமைப்புகள் இல்லை என்றால் இன்றைய சமூக வலைதளமே இல்லை எனலாம்.

எல்லாவற்றுக்கும் மீம்ஸ் போடுவதற்கு வடிவேலின் காமெடி காட்சிகள்தான் பயன்படுகின்றன. அரசியல் ரீதியான பரபரப்பான நிகழ்வுகள் அனைத்துக்குமே வடிவேலுவின் பொருத்தமான படத்தில் இருந்து காமெடி காட்சியை எடுத்து மீம்ஸ் கிரியேட் செய்து அரசியல்வாதிகள் பலரை கதற வைப்பதில் வடிவேலு மீம்ஸ்தான் முன்னணியில் இருக்கிறது.

அவரை அருமையான பாடலை எடுத்து உதாரணமாக ராஜராஜ சோழன் நான் என்ற அருமையான பாடல் அதில் வரும் கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே என்ற் பாடல் வரிகளில் தொடங்கி அப்பாடல் முடியும் வரையிலான காட்சிகளில் வடிவேலு வருவது போல அமைத்துள்ளார்கள் .

வடிவேலு பல பல படங்களில் பல வித காட்சிகளில் நடித்துள்ளார் அதை எல்லாம் எடுத்து போட்டு வெட்டி ஒட்டி வடிவேல் பாடலாகவும் மாற்றி விடுகின்றனர்.

இப்படியாக வடிவேலு இந்த வருடம் மட்டுமல்ல இனி வரும் 2020லும் வடிவேலுவே டிரெண்டிங்கில் இருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை.