Connect with us

20 ஓவர் கிரிக்கெட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

விளையாட்டு

20 ஓவர் கிரிக்கெட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் நேற்று நடந்தது. தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் இந்திய அணியில் துணை கேப்டன் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

கலீல் அகமது நீக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், சகோதரர்கள் தீபக் சாஹர், ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் வெஸ்ட் இண்டீசை பேட் செய்ய வேண்டினார்.

20 ஓவர் கிரிக்கெட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி



இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீசில் சுனில் நரின் (2 ரன்), இவின் லீவிஸ் (10 ரன்), ஹெட்மயர் (1 ரன்) ஆகிய 3 பேரின் விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கைப்பற்றினார்.


ஸ்கோர் 80 ரன்களாக உயர்ந்த போது பூரன் 17 ரன்களில் கேட்ச் ஆனார். அரைசதம் விரட்டிய பொல்லார்ட் 58 ரன்களில் கிளன் போல்டு ஆனார்.
20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவான் 3 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 20 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 59 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 65 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top