Connect with us

20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட்: அமைச்சரவை முடிவு

செய்திகள்

20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட்: அமைச்சரவை முடிவு

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்க கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது கேரளாவில் இணையதள இணைப்பு அடிப்படை உரிமையாக்கபட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.1548 கோடி மதிப்பில் கேரளாவில் பைபர் ஆப்டிக் நெட்வொர்க் ஏற்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும் கூறினார்

மேலும் இணையதளம் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்

இந்த இலவச திட்டம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு கேரள மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top