Connect with us

போட்டியின்போது வாந்தி எடுத்த 2 வீரர்கள்… மறைக்கப்பட்ட உண்மைகள்!!!

விளையாட்டு

போட்டியின்போது வாந்தி எடுத்த 2 வீரர்கள்… மறைக்கப்பட்ட உண்மைகள்!!!


இந்திய மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் 3 நாட்களுக்கு முன்னதாக நடந்து முடிந்தது.

  டெல்லி பொதுவான நாட்களிலேயே மாசு அதிக அளவில் கொண்டதாக இருக்கும், அதுவும் கிரிக்கெட் நடைபெற்ற அந்த நாட்களில் தீபாவளியை வந்ததையொட்டி கூடுதலாக பட்டாசுப் புகைகளும் சேர்ந்து காற்று மாசின் அளவு அதிக அளவில் இருந்தது.

அதுமட்டுமல்லாது ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் விவசாயக் கழிவுகள் எரிக்கப்பட்டு அந்தப் புகையும் கலக்க, புகைகள் அதிகமானது. போட்டி நடைபெற்றபோது காற்று தரத்தை அளக்கும் கருவியில் இருக்கும் 999 என்ற அதிகபட்ச அளவை தாண்டி இருந்தது.

போட்டியின்போது வாந்தி எடுத்த 2 வீரர்கள்… மறைக்கப்பட்ட உண்மைகள்!!!

பயிற்சியில் ஈடுபடும்போது 499 என்ற அளவில் இருந்த மாசு ஆனது, ஓரிரு நாட்களில் 999 என்ற அளவாக மாறியது.

கண் எரிச்சல் மற்றும் தொண்டை வறண்டு போதல் என வீரர்கள் கடுமையான உடல்நலக் குறைவினை சந்தித்துள்ளனர்.

வங்கதேச வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடலாம் என்று போட்டி நடப்பதற்கு முந்தையநாள் கூறப்பட்டது.

ஆனால் இரு அணி வீரர்களும் முகமூடி ஏதும் இல்லாமல் விளையாடினர், போட்டி நடைபெற்றபோதே மைதானத்தில் இருந்து சிறிது தூரத்தில் புகை மண்டலமாக இருந்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்தப் போட்டியின்போது வங்கதேச வீரர்கள் இருவர் கடுமையான வாந்தி எடுத்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தத் தகவலை இரண்டு கிரிக்கெட் வாரிய அமைப்புகளும் வெளிவிடவில்லை.

இதுகுறித்து பலரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top