2வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஏற்கனவே அந்நாட்டு அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ரோஹித், தவான், தோனி ஆகியோர் பேட்டிங்கில் கலக்க, குல்தீப், புவனேஷ்குமார், சாஹல் ஆகியோர் பந்துவீச்சில் அதிரடி காக்க இந்திய அணி தற்போது 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் உள்ளது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 324/4 50 ஓவர்கள்

ரோஹித் சர்மா 87
தவான்: 66
தோனி: 48
ராயுடு: 47
கோஹ்லி:43

நியூசிலாந்து: 234/10 40.2 ஓவர்கள்

பிரேஸ்வெல்: 57
லாதம்: 34
நிக்கோல்ஸ்: 28

ஆட்டநாயகன்: ரோஹித் சர்மா