2வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இன்று நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை செய்துள்ளது

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன் எடுத்தது. இதனை அடுத்து 388 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 280 ரன்களில் ஆல் அவுட் ஆகி 107 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது

இரு அணிகளும் தற்போது தலா ஒரு வெற்றியைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 22-ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணியே இந்தத் தொடரை வெல்லும் அணி என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 387/5 50 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 159
கே.எல்.ராகுல்: 102
ஸ்ரேயாஸ் அய்யர்: 53
ரிஷப் பண்ட்: 39

மே.இ.தீவுகள் அணி: 280/10 43.3 ஓவர்கள்

ஹோப்: 78
பூரன்: 75
பால்: 46
லீவீஸ்: 30