இந்திய கடற்படையில் 172 சார்ஜ்மென் வேலை

இந்திய கடற்படையில் 172 சார்ஜ்மென் வேலை

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 172 சார்ஜ்மென் (Chargeman) பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய கடற்படையில் 172 சார்ஜ்மென் வேலை

காலிப் பணியிடங்கள்:

சார்ஜ்மேன் (Mechanic)  பிரிவில் 103 பணியிடங்களும், சார்ஜ்மேன் (Ammunition & Explosive)  பிரிவில்  69  பணியிடங்களும் உள்ளன.

கல்வி தகுதி:

சார்ஜ்மேன் (Mechanic) பணியிடங்களுக்கு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், புரோடெக்ஷன் இன்ஜினியரிங் பிரிவில் பட்டயப்படிப்பு  மற்றும் குவாலிட்டி கன்ட்ரோல் அல்லது குவாலிட்டி டெஸ்டிங் துறையில் இரண்டு வருட பணி அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.சார்ஜ்மேன் (Ammunition & Explosive) பணியிடங்களுக்கு  கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டயபப்டிப்பு அல்லது குவாலிட்டி டெஸ்டிங் துறையில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவனருக்கு 205 ரூபாய். மற்ற பிரிவினர்கள், பெண்கள், முன்னாள் ராணுவ குடும்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்  மூலம் www.joinindiannavy.gov.in  அல்லது  www.indiannavy.nic.in என்ற  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.   மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/1ZUSUVuXUM8mOQ29HvMIIc1jRRC1AqZiZ/view என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

     விண்ணப்பம் தொடங்கும் நாள்: 16.04.2019

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 28.04.2019