இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நம் இந்திய நாட்டின் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. அந்நாள் நம்முடைய தேசத்தின் உதய நாளாகும். நமது தாய் நாடான இந்தியா சுதந்திரமடைந்து சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்றால் அதற்கு காரணம் நமது தலைவர்களும், தேச வீரர்களும் ஆவார்கள்.

     நமது நாட்டிலேயே இரு நூறூ வருடங்களாக அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக அகப்பட்டிருந்தோம். அந்நிலை மாற நம் நாட்டின் தலைவர்கள் ஆயிரக்கணக்கான போர்களையும், புரட்சிகளையும் நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி

     சுதந்திரம் என்ற ஒன்றை மட்டும் நினைவில் கொண்டு தலைவர்களும், வீரர்களும் நம் நாட்டு மக்களுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். தங்களின் குடும்பங்களையும் பொருட்படுத்தாமல் நாட்டிற்காக போராடி சுதந்திரம் பெற்று தந்துள்ளனர்.

73-வது சுதந்திர தின விழாவை நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி சிறப்புரை ஆற்ற உள்ளார்.