பொள்ளாச்சி போதை இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு

பொள்ளாச்சியில் வெள்ளிக்கிழமை இரவு கேளிக்கைகளில் ஈடுபட்ட 150 இளைஞர்களை கைது செய்யப்பட்டனர். கேரளாவை சேர்ந்த இளைஞர்கள்தான் இதில் அதிகம் உள்ளனர். ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்த மது விருந்தில் கோகைன், கஞ்சா உள்ளிட்ட விலையுயர்ந்த போதை பொருட்கள் பரிமாறப்பட்டன.

ஏற்கனவே பாலியல் விவகாரம் சம்பந்தமாக தமிழகமே அதிர்ந்திருக்கும் பொள்ளாச்சியில் இன்னொரு விபரீதம் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் அதிரடி முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்தது.

அக்ரி நெஸ்ட் என்ற அந்த ரிசார்ட் உரிமையாளர் ஜெய்கணேஷ் கைது செய்யப்பட்டார். மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவின் பேரில் அந்த ரிசார்ட் சீல் வைக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் உத்தரவின் பேரில் அங்கு இருந்த150 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.