Connect with us

கொரோனாவால் உயிர் இழந்த 15 வயது சிறுவன்: அதிர்ச்சித் தகவல்

செய்திகள்

கொரோனாவால் உயிர் இழந்த 15 வயது சிறுவன்: அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 38 பேர்களும் நேற்று 44 பேர்களும் தமிழகத்தில் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்

இருப்பினும் கொரோனாவால் இதுவரை நடுத்தர வயதினர் மற்றும் வயதானவர்கள் மட்டுமே பலியாகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன் கொரோனாவால் உயிரிழப்பது உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுத்திணறல் பாதிப்பு மற்றும் தசை சிதைவு நோய் ஆகியவை இருந்து வந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் கொரோனா தொற்று சேர்ந்து கொண்டதால் அதன் காரணமாக நிமோனியா காய்ச்சலும் வந்துள்ளது. இதனால் அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அந்த சிறுவனுக்கு ஒருசில வியாதிகள் ஏற்கனவே இருந்தாலும் கொரோனா காரணமாக உயிரிழந்த மிக இளவயது சிறு நபர் இவர்தான் என்பதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
To Top