Connect with us

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டியது 14 வயது சிறுவனா? அதிர்ச்சி தகவல்

செய்திகள்

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டியது 14 வயது சிறுவனா? அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று மாலை திடீரென வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரஜினியின் வீட்டிற்குச் சென்று அவரது வீட்டை முழுமையாக சோதனை செய்து வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர்

இதனை அடுத்து ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி கடலூரில் உள்ள 14 வயது சிறுவன் தான் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளதால் அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுப்பதா? வேண்டாமா? என்பது குறித்து போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 14 வயது சிறுவன் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Continue Reading
To Top