Connect with us

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுதல் மதுக்கடைகள்: தமிழக அரசு அனுமதி

செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுதல் மதுக்கடைகள்: தமிழக அரசு அனுமதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 46 மதுக்கடைகள் இருக்கும் நிலையில் அவற்றிற்கு 16 கடைகளுக்கு மட்டுமே திறக்க கடந்த 16ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது

இந்த நிலையில் நாளை முதல் மேலும் 13 கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 29 கடைகள் நாளை முதல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில் மது வாங்க வருபவர்கள் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்றும் மேலும் முகக் கவசங்கள் அணிந்து குடையுடன் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுதலாக மதுக்கடைகள் திறக்கவிருப்பதால் சென்னையில் இருந்து வந்து மதுவாங்குபவர்களை தடுக்க செக்போஸ்ட்களில் தீவிர சோதனை நடத்தவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top