Connect with us

ஹைதராபாத்தில் உள்ள 127 பேர் இந்திய குடிமகன் இல்லையா? அதிர்ச்சித் தகவல்

செய்திகள்

ஹைதராபாத்தில் உள்ள 127 பேர் இந்திய குடிமகன் இல்லையா? அதிர்ச்சித் தகவல்

ஐதராபாத்தில் உள்ள 127 பேர் பொய்யான தகவல்களை கூறி ஆதார் அட்டை பெற்றுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் 20ஆம் தேதி ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது

இந்த 127 பேரும் பொய்யான தகவல் கூறியதாக தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் அனைவரும் தங்களை இந்திய குடிமகன்கள் என்பதை நிரூபிக்க வேறு ஆதாரங்கள் காட்ட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் வதந்திகள் பரவி வருகிறது

ஆனால் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியபோது ஆதார் எண் முறைகேடாக பெற்றதற்கும் இந்திய குடிமகனுக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர்கள்ஆதார் எண் முறைகேடாக பெற்று இருந்தால் அவர்களுடைய ஆதார் அட்டை மட்டும் பறிமுதல் செய்யப்படும் என்றும் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கூறியுள்ளனர் இருப்பினும் இதுகுறித்து வரும் 20ஆம் தேதி ஆஜரான பின்னர் தான் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top