Connect with us

24 மணி நேரத்தில் 1149 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பரபரப்பு

செய்திகள்

24 மணி நேரத்தில் 1149 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பரபரப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் இன்றுதான் தமிழகத்தில் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1149 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22333 என உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் இன்று மட்டும் 804 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14802 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 13 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 173 பேர் பலியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று 757 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 12757 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று 12049 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 491,962 பேர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top