தசாவாதாரத்துக்கு வயது 11

கமல்ஹாசன் நடிப்பில் தசாவாதாரம் படம் ரிலீஸ் ஆகி இன்றோடு 11 வருடம் ஆகிறது கடந்த 2008ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி ரிலீஸ் ஆன இந்தப்படம் மிகப்பெரும் வெற்றிப்படம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் கமல் பத்து வேடங்களில் நடிக்கிறார் படம் எப்படி இருக்குமோ என எதிர்பார்க்க வைத்த படம்.

கமல்ஹாசனின் கிழவி கெட் அப்பும், சிபி ஐ அதிகாரி கெட் அப்பும் பெரிதும் ரசிக்கப்பட்டது. விஞ்ஞானி இளைஞன், வளர்ந்த இஸ்லாமிய வாலிபர், போராளி,சிபிஐ அதிகாரி, வயதான மூதாட்டி, ஜப்பான் விஞ்ஞானி, சங்க காலத்து வைணவன்,வெள்ளைக்கார துரை,பாடல் பாடும் பாப் பாடகர் என பல்வேறு கெட் அப்புகளில் இந்த படத்தில் கலக்கினார்.

க்ளைமாக்ஸ் சுனாமி காட்சிகள் பிரமாண்டத்தின் உச்சம்.

இப்படியொரு படம் இனி ஒருமுறை வருவது அரிது.கே.எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். ஹிமேஷ் ரேஷ்மியா இசையமைத்திருந்தார்.

சைவ வைணவ காலத்து காட்சியமைப்புகள் அபாரமாக இருந்தது.