11 கதை ரெடியா இருக்கு… ஊரடங்கை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மிஷ்கின்!!

இயக்குனர் மிஷ்கின் 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார். வித்தியாசமான கதைக்களத்தால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தினை கொண்டிருப்பவராக இருந்து வருகிறார்.

இரண்டாவது படமான அஞ்சாதே மிகப் பெரிய மாஸ் ஹிட் படமாக அமைந்தது. அப்படத்திற்காக பல விருதுகளையும் வென்று குவித்தார். இவரது நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, பிசாசு போன்ற படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களாகும்.

3e66a894c02c9bd15e0a4a70d7789b9c

இவரது துப்பறிவாளன் படம் மிகப் பெரும் வெற்றி அடைந்ததையடுத்து துப்பறிவாளன் 2 வினை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் பாதி வேலை முடிவடைந்த நிலையில், விஷாலுடன் பிரச்சனை ஏற்பட படத்திலிருந்து மிஷ்கின் விலகினார்.

இந்தநிலையில் சமீபத்தில் இவரது சைக்கோ படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் ஹிட் ஆனதுடன், வசூல் சாதனையினையும் செய்தது. தற்போது ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மிஷ்கின் 11 படத்திற்கான கதையினைத் தயார் செய்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, “இந்த ஊரடங்கில் 11 கதைகளை தயார் செய்து வைத்துள்ளேன். இதனைப் படமாக்கவும் விரும்புகிறேன், ஒவ்வொன்றாக நிச்சயம் வெள்ளித்திரைக்கு வரும். மேலும் அஞ்சாதே படம் பார்த்துவிட்டு சிம்பு, என் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.” என்று கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews