Connect with us

பீகார், உபியில் மின்னல் தாக்கில் 107 பேர் பலி: கொரோனாவுக்கு மத்தியில் இப்படி ஒரு சோகமா?

செய்திகள்

பீகார், உபியில் மின்னல் தாக்கில் 107 பேர் பலி: கொரோனாவுக்கு மத்தியில் இப்படி ஒரு சோகமா?

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்று மின்னல் தாக்கியதால் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் 107 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று திடீரென இரவில் கண்ணை பறிக்கும் வகையில் மின்னலடித்தது. இந்த மின்னல் தாக்கியதில் பீகார் மாநிலத்தில் 83 பேர்களும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 24 பேரும் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மேலும் மின்னல் தாக்கியதால் பலர் காயமடைந்திருப்பதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் உத்தரபிரதேசம் பீகார் மாநிலங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பீகார் மற்றும் உபி மாநிலங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஏற்கனவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு இயற்கை பேரிடரால் 100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது

Continue Reading
To Top