ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க தைரியம் தேவை-வித்யாபாலன்

பிரபல நடிகை வித்யா பாலன் தற்போது அஜீத் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி மீது மரியாதை கொண்ட வித்யா பாலன் கூறியதாவது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கதாப்பாத்திரத்தில் நடிக்க நிறைய தைரியம் வேண்டும் என கூறியுள்ளார்.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவிய த டர்டி பிக்சர் படத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். தற்போது, மறைந்த புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி கதாப்பாத்திரத்தில் நடிக்க அவர் ஆர்வம் காட்டியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள வித்யாபாலன், ஸ்ரீதேவியின் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு நிறைய தைரியம் வேண்டும் என்றும், இருப்பினும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தன்னால் நடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.