ஸ்டாலினிடம் தலைமை பண்பு கிடையாது- சரத்குமார்

ஸ்டாலின் சமீபத்தில் ஒரு திருமண விழாவுக்கு சென்றார். சென்ற இடத்தில் சர்ச்சைக்குரிய பேச்சு பேசி சமூக வலைதள மக்களிடமும், மற்றவர்களிடமும் வசமாக சிக்கி கொண்டார்.

திருமணங்களில் ஓதப்படும் வேத மந்திரங்களை பற்றி தவறான பொருள்படும்படி பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேத மந்திரங்கள் அருவருப்பானவை என்ற வகையில் ஸ்டாலின் பேசி இருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார்,
தி.மு.க தலைவர் ஸ்டாலின், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியிருப்பது, அவரிடம் தலைமைப் பண்பு இல்லாததை வெளிப்படுத்துவதாக சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாராக இருந்தாலும், ஒரு மத நம்பிக்கையை புண்படுத்தும் அநாகரீகத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட அவர், இது போன்று பேசுவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.