Connect with us

வைரமுத்து மீது கல்லூரி மாணவி பாலியல் புகார்: திடுக்கிடும் தகவல்

பொழுதுபோக்கு

வைரமுத்து மீது கல்லூரி மாணவி பாலியல் புகார்: திடுக்கிடும் தகவல்

திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது நேற்று பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் இன்று ஒரு கல்லூரி மாணவியும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். இந்த தகவலை பெண் பத்திரிகையாளர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த கல்லூரி மாணவி கூறியதாவது:

“வைரமுத்து இடமிருந்து ஒருநாள் எனக்கு அழைப்பு வந்தது. நானும் சென்றேன். என் தாத்தாவின் வயது இருக்கும் அவர், என்னை பாலியல் ரீதியாக அணுகினார். சுதாரித்துக்கொண்ட நான் உடனே அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டேன். சில நாட்கள் கழித்து என்னை மீண்டும் தொடர்பு கொண்ட வைரமுத்து, தன் மனைவியிடம் இந்த விவகாரம் பற்றி சொல்ல வேண்டாம் என்று வேண்டினார். நானும் சொல்லவில்லை. என் போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை கூறுகிறேன். என் பெயரை தவிர்த்து விட்டு செய்தியாக வெளியிடுங்கள்”

இவ்வாறு அந்த கல்லூரி மாணவி தெரிவித்துள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top