விடுதலைப்புலிகளை இந்து தீவிரவாதிகள் என கூறிய இம்ரான்கான்

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்னரே அதிகமாக விடுதலைப்புலிகள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அந்த தாக்குதல்களை யாரும் இந்து தீவிரவாதம் என்று கூறவில்லை என்றும் ஐ.நாவில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

அதனால் தீவிரவாதத்தை மதத்துடன் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பாக இஸ்லாம் தீவிரவாதிகள் என்று ஊடகங்கள் சொல்வதை நிறுத்த வேண்டும் என்றும் இம்ரான்கான் மேலும் கூறியுள்ளார்.

தீவிரவாதத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்றும், இஸ்லாம் உண்மையில் அமைதியை விரும்புவதாகவும், ஒருசில இஸ்லாமியர்கள் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த இஸ்லாமியத்தை தவறாக சித்தரிக்க வேண்டாம் என்றும் இம்ரான்கான் ஊடகங்களை கேட்டு கொண்டார்

விடுதலைபுலிகள் குறித்து இம்ரான்கான், ஐ.நா சபையில் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது