Connect with us

வாலிபால் பிளேயராக மாறும் விஜய்சேதுபதி!

பொழுதுபோக்கு

வாலிபால் பிளேயராக மாறும் விஜய்சேதுபதி!


மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது மாமனிதன், சிந்துபாத், துக்ளக் உள்ளிட்ட ஆறு படங்களில் நடித்து வருகிறார். மாமனிதன் படம் திரையிட தயாராகியுள்ள நிலையில் மற்ற படங்களின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘பண்ணையாரும் பத்மினியும், ‘சேதுபதி’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமாரின் உதவியாளர் பிரபு என்பவர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி வாலிபால் விளையாட்டு வீரராக நடிக்கவுள்ளதாகவும், இதற்காக அவர் தினமும் வாலிபால் விளையாடி பயிற்சி எடுப்பதாகவும் கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்க்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இயக்குனர் அருண்குமார் விஜய்சேதுபதி நடித்து வரும் ‘சிந்துபாத்’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் அவருடைய உதவியாளரும் விஜய்சேதுபதி படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Continue Reading

அதிகம் படித்தவை

To Top