வாத்து வியாபாரத்தில் ஈடுபடும் மன்சூர் அலிகான்

இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தனக்கான தொகுதியாக தனது சொந்த மண்ணான திண்டுக்கல்லை கேட்டு வாங்கி அந்த தொகுதியில் போட்டி இடுபவர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான்.

இதுவரை எந்த ஒரு வேட்பாளரும் செய்யாத அளவில் சந்து பொந்துகள், இண்டு இடுக்குகள், என ஒரு இடத்தையும் மீதம் வைக்காமல் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார் மன்சூர் அலிகான்.

சட்னி அரைத்து கொடுத்தது, சாலையோர ஹோட்டல்களுக்கு சென்று புரோட்டா போடுவது, அதை தூக்கி போட்டு பிடிப்பது. அவர் சொந்த ஊருக்குள் சென்று உறவுகளை பார்வையிடுவது, வேஷ்டி சட்டை பஞ்சகச்சம் கட்டி, விவசாயி போல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நின்றது என கலக்குகிறார் மன்சூர்.

இருப்பினும் சில தினங்களுக்கு முன் மன்சூர் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது.ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்ட மன்சூர் அலிகான், உடல்நிலை தேறியவுடன் மீண்டும் வாத்து வியாபாரத்தில் ஈடுபடுவது, மீன் வியாபாரத்தில் ஈடுபடுவது என மீண்டும் கலக்கி வருகிறார்.

மன்சூர் அலிகானின் பிரச்சாரம் மட்டும் திண்டுக்கல் தொகுதியில் டாப் லெவலில் உள்ளது.