Connect with us

வடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்

பொழுதுபோக்கு

வடிவேலு மீது பாய்ந்த இயக்குனர் நவீன்

இயக்குனர் நவீன் சமீப காலமாக அனைத்து தலைப்பு செய்திகளிலும் அடிபடும் ஒரு நபராக இருக்கிறார். தீவிர பெரியாரிஸ்டான நவீன், சில நாட்களுக்கு முன் பெரியாரின் கைத்தடி இந்திய மேப்பில் இருந்து தமிழ்நாட்டை பிரித்துக்கொண்டு செல்வது போல் படம் பதிவேற்றி இருந்தார். இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது வடிவேலுவை கடுமையாக திட்டியுள்ளார் நவீன்.

வடிவேலு சமீபத்தில் சிம்புதேவன் குறித்து அளித்த பேட்டியில் சிம்புதேவனுக்கு வேலை தெரியாது என்ற வகையில் பேட்டி அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

வடிவேலு நல்ல கலைஞன் தான் ஆனால் அகந்தை இந்த அளவு இருக்க கூடாது என கூறியுள்ளார்.

சிம்புதேவன் சாரை அவன் இவன் என்று பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் கூறி இருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் பேசி வருகிறார். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிற ஸ்கிரிப்டை ரெடி செய்ய முடியாது. இவ்வளவு அகந்தை உங்களுக்கு இருக்க கூடாது என கூறியுள்ளார்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

பொழுதுபோக்கு

பீட்சாவுக்கு 7 வயது

To Top