Connect with us

வங்கி வேலைநிறுத்த போராட்டத்தில் திடீர் திருப்பம்: நிம்மதி அடைந்த மக்கள்

செய்திகள்

வங்கி வேலைநிறுத்த போராட்டத்தில் திடீர் திருப்பம்: நிம்மதி அடைந்த மக்கள்

வங்கி அதிகாரிகள் சங்கம் செப்டம்பர் 26, 27 ஆகிய இரண்டு தினங்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வேலைநிறுத்தம் நடைபெறும் செப்டம்பர் 26, 27 மற்றும் அதனை அடுத்து வரும் சனி, ஞாயிறு என நான்கு நாட்களில் வங்கி செயல்பாடுகள் முடக்கம், ஏடிஎம்மில் பணம் இல்லாமல் போகும் நிலை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால் மக்கள் திண்டாடும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற திட்டமிட்டிருந்த வேலைநிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளதால் தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக வங்கி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனையடுத்து வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top