ரோஹித், கே.எல்.ராகுல் சதம்: மே.இ.தீவுகளுக்கு இமாலய இலக்கு

விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 5 விக்கட்டுக்களை இழந்து 387 ரன்கள் எடுத்துள்ளது

ரோகித் சர்மா 159 ரன்களும், கேஎல் ராகுல் 102 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பதும், ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும் ரிஷப் பண்ட் 39 ரன்கள் எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 387 ரன்கள் குவித்துள்ளது

தற்போது 388 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி சற்றுமுன் வரை 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 44 ஓவர்களில் அந்த அணி 355 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது